News Ticker

Menu

Latest Post

Tamil Movies News

Movie News In English

Video

Technology

Sports

my Poll

Saturday, December 27, 2014 /

கடலை போடுவதை நிறுத்திய ஸ்ரீதிவ்யா!

Wednesday, November 19, 2014 /
கடலை போடுவதை நிறுத்திய ஸ்ரீதிவ்யா!
கடலை போடுவதை நிறுத்திய ஸ்ரீதிவ்யா!
படப்பிடிப்பு தளங்களில் நடிகர்-நடிகைகள் அரட்டையடித்து காதுகளில் ரத்தம் வழிய வைக்கும் கதைகளை கேட்டிருக்கிறோம். அந்த வரிசையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யாவும், ஆரம்பத்தில் ஸ்பாட்டில் செம கடலை போட்டு வந்தார். ஆனால், சமீபகாலமாக அடக்கி வாசித்து வருகிறார் அம்மணி.

இதற்கு காரணம், அவரை வைத்து படம் இயக்கிய சில டைரக்டர்கள், டேக் ரெடியாகி விட்ட சேதியைகூட கண்டுகொள்ளாமல் ஹீரோக்களுடன் இவர் ஜாலி அரட்டையில் ஈடுபட்டதால், செம டோஷ் விட்டார்களாம். அதனால், அதிக வாயாடினால் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகி விடும் என்றுதான் இப்போது பேச்சை  குறைத்திருக்கிறாராம் நடிகை.

அது மட்டுமின்றி, முன்பெல்லாம் தனது பாய் ப்ரண்டுகளுடன் போனில் பேசத் தொடங்கினால், எப்.எம். ரேடியோ போன்று நிறுத்தாமல் பேசி சுற்றியிருப்பவர்களை வெறுப்பேற்றும் ஸ்ரீதிவ்யா, இப்போது போனில் பேசினால், தனக்கு அருகில் அமர்ந்திருப்பவர்களுக்குகூட கேட்காத அளவுக்கு முணுமுணுக்கிறாராம். அந்த அளவுக்கு டைரக்டர்கள் விட்ட டோஷ் வேலை செய்கிறதாம்.

வாட்ஸ் அப்பில் “வாய்ஸ் கால்” – 2015 ஆம் ஆண்டிலிருந்து அறிமுகம்!

Tuesday, November 18, 2014 /
 வாட்ஸ் அப்பில் “வாய்ஸ் கால்” – 2015 ஆம் ஆண்டிலிருந்து அறிமுகம்!
 வாட்ஸ் அப்பில் “வாய்ஸ் கால்” – 2015 ஆம் ஆண்டிலிருந்து அறிமுகம்!
இளைஞர்களிடையே தகவல் பரிமாற்றத்தில் கொடிகட்டி பறந்துவருகின்ற வாட்ஸ் அப் நிறுவனமானது, 2015 ஆம் ஆண்டில் இலவச வாய்ஸ் கால் வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளது.

வாட்ஸ் அப் இந்த ஆண்டு இறுதியில் தனது இலவச வாய்ஸ் கால் சேவையை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய இறுதி அறிவிப்பின்படி வாட்ஸ் அப்பின் இந்த இலவச வாய்ஸ் கால் சேவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்ஸ் கால் சேவை சரியாக தொடங்குவது காரணமாக தொய்வு ஏற்பட்டுள்ளது. புதிய அம்சங்களுடன் பயன்பாட்டுக்கு வாட்ஸ் அப் வெளியிடுவதில் தொழில்நுட்ப பிரச்சனை உள்ளது என்றும் அதனை சரிசெய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட செல்போன்களில் இருந்து ஒலிவாங்கி தொடர்பான குறைபாடு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அம்சங்கள் வாட்ஸ் அப் 4.5.5 பதிப்பில் வெளியாகுகிறது.

ஏப்ரல் மாதத்தில் இத்தகைய சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று கூறப்படுகிறது. இத்தகைய சேவை அளிக்கப்பட்டால் செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களின் வருவாயை வெகுவாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சீனாவின் விசாட், கொரியாவின் காகோடாக், இஸ்ரேலின் விபர் ஆகிய நிறுவனங்கள் வாய்ஸ் கால் சேவையை அளிப்பதால் அந்தந்த நாடுகளில் உள்ள செல்போன் சேவை நிறுவனங்களின் வருமானம் வெகுவாகக் குறைந்துள்ளது.

9 பேர் அமரும் வகையில் 'சைனா பைக்'!

/
9 பேர் அமரும் வகையில் 'சைனா பைக்'!
9 பேர் அமரும் வகையில் 'சைனா பைக்'!
 நீங்கள் படத்தில் பார்க்கும் இந்த பைக், சத்தியமாய் சைனா மேக்தான். மத்திய சீனாவில், ஜெங்ஷூ என்னும் மாகாணத்தில், இந்த நீ...ளமான எலெக்ட்ரிக் பைக்கைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். 9 பேர் வரை அமரக்கூடிய இந்த பைக் 4.7 மீட்டர் நீளம்
9 பேர் அமரும் வகையில் 'சைனா பைக்'!
9 பேர் அமரும் வகையில் 'சைனா பைக்'!


பெரிய ஸ்கூட்டர் கம்பெனியோ, பைக் கம்பெனியோ இதைத் தயாரிக்கவில்லை. ஒரு எலெக்ட்ரிக் பைக் கடை ஒன்றில், திடீரென்று இந்த பைக் நிறுத்தப்பட்டிருந்தது கண்டு, வாடிக்கையாளர்கள் குவிய ஆரம்பித்து விட்டார்களாம்.

இந்த பைக்கில் இரண்டு பேட்டரிகள் இருக்கின்றன. விடிய விடிய நீங்கள் இதை சார்ஜ் போட்டால் 60 கி.மீ வரை பைக்கை ஓட்டலாம். வழக்கம்போல், இதை ஓட்ட லைசென்ஸும் தேவையில்லை.

ஆனால், பால் பாக்கெட் வாங்க, மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கவெல்லாம் இதை எடுத்துச் செல்ல முடியாது. ஏனென்றால், இதை பார்க்கிங் பண்ணுவதற்கே சில ஏக்கர்களில் நிலம் தேவைப்படுமே!

கின்னஸ் ரெக்கார்டுக்காக இன்னும் கொஞ்சம் மெருகூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது, இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த எலெக்ட்ரிக் பைக்!

ஒரே வார்த்தையில் சூர்யாவை கண்கலங்க வைத்த விஜய்

/
ஒரே வார்த்தையில் சூர்யாவை கண்கலங்க வைத்த விஜய்
ஒரே வார்த்தையில் சூர்யாவை கண்கலங்க வைத்த விஜய்
எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சாவித்ரி மற்றும் பலர் நடித்த இசை படத்தின் ஆடியோ வெளியீட்டு சமீபத்தில் விழா நடைபெற்றது. அதன் மறு ஒளிபரப்பு நேற்று மாலை ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டது.

அதில் நடிகர் விஜய், தனுஷ், இயக்குனர் முருகதாஸ், விஷ்ணுவரதன் மற்றும் பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விஜய் பேசும்போது, ‘‘எனக்கு ‘குஷி’க்கு முன் வாழ்வா சாவா என்ற நிலை இருந்தது. இந்தப்படமும் ஓடவில்லை என்றால் என்னாகும் என்ற கேள்வி இருந்தது. அந்த நேரத்தில் ‘குஷி’ என்கிற வெற்றிப்படம் கொடுத்து என்னை தூக்கி விட்டவர் சூர்யா. இப்போது அதற்கு நன்றி சொல்கிறேன்.

‘குஷி’ ரிலீசானவுடன் விக்ரமன் சார் கேட்டார், எப்படி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டீர்கள். இதுல என்ன கதையை இருக்கிறது என்றார். நான் சொன்னேன் சரிதான் ஆனால் எஸ்.ஜே.சூர்யா என்று ஒருத்தர் இருக்கிறார் அவர் கதை சொல்லிக் கேட்க வேண்டும். அப்படி அசத்துவார். நம்மை அப்படியே வசியம் செய்துவிடுவார் என்றேன். இந்த படத்தின் 75 சதவீதம் கதை எனக்கு தெரியும் ‘நண்பன்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது ‘இசை’ படத்தின் கதையை என்னிடம் சொன்னார். நன்றாக இருந்தது. அவர் தனித்தன்மையான டைரக்டர். இசையமைப்பாளராகவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்’’ என்று மனம் திறந்து பேசி நன்றியுடன் பாராட்டினார்.

இதையடுத்து எஸ்.ஜே.சூர்யா பேசியபோது, விஜய் சார் இப்ப எங்கேயோ போய் விட்டார். இன்று ஒரு பிராந்திய மொழியில் 100 கோடி ரூபாய் வசூல் செய்யுமளவுக்கு உயர்ந்த பிறகும் குஷி படத்திற்காக நன்றி கூறியதும் என் கண் கலங்கி விட்டது என்றார். மேலும், ‘இசை’ படத்தில் இசையமைப்பளராக நடிக்க இசைப்பயிற்சி எடுக்க விரும்பினேன். அப்போது ஏ.ஆர். ரகுமான் ‘ஏன் நீங்களே இசையமைக்கக் கூடாது?’ என்று ஊக்கமும் நம்பிக்கையும் கொடுத்தார். நான் இசையமைப்பளராக அவர்தான் காரணம் என்றார்.”

டிசம்பர் 5ல் "ஆம்பள" பாடல்- விஷால் உறுதி

/
டிசம்பர் 5ல் "ஆம்பள" பாடல்- விஷால் உறுதி
டிசம்பர் 5ல் "ஆம்பள" பாடல்- விஷால் உறுதி

பூஜை வெற்றி படத்திற்கு பின்னர் விஷால் நடித்து வரும் திரைப்படம் 'ஆம்பள'. இந்த படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே விஷால் நடித்த 'மத கத ராஜா' என்ற திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால், ஹன்சிகா, மதுரிமா, மாதவி லதா, ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா, சந்தானம் மற்றும் பலர் நடித்த 'ஆம்பள' படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார். விஷாலின் "விஷால் பிலிம் பேக்டரி" தயாரித்து வரும் இந்த படத்தின் ஒரு பாடல் வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வெளிவரும் என அதிகாரபூர்வமாக விஷால் அறிவித்துள்ளார். மற்ற பாடல்கள் வெளிவரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வரும் பொங்கல் தினத்தில் 'ஆம்பள' படத்தை ரிலீஸ் செய்வதற்காக மிகவும் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், அடுத்த வாரம் இரண்டாம் வாரத்திற்குள் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு பின்னர் தொழில்நுட்ப பணிகள் துவங்கும் என்று படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது

சித்தார்த்தின் எனக்குள் ஒருவன் படத்திற்கு யு சான்றிதழ்

/
சித்தார்த்தின் எனக்குள் ஒருவன் படத்திற்கு யு சான்றிதழ்
சித்தார்த்தின் எனக்குள் ஒருவன் படத்திற்கு யு சான்றிதழ்
சித்தார்த் நடிப்பில் ‘காவியத்தலைவன்’ ரிலீசுக்கு காத்திருக்கிறது. இதற்கிடையில் சித்தார்த்தின் அடுத்தப்படமும் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

லூசியா என்ற பெயரில் உருவான கன்னடப்படம் ஆயிரம் பேர் நிதியுதவியுடன் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. அப்படத்தின் ரீமேக்காக ‘எனக்குள் ஒருவன்’ படம் உருவாகியுள்ளது. இதில் சித்தார்த் நாயகனாவும் தீபா சன்னிதி நாயகியாக நடித்திருக்கிறார்கள். பிரசாத் ராமர் இயக்கியிருக்கிறார். சி.வி. குமார் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சென்சார் போர்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். இப்படத்தை ஜனவரி மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஷங்கரின் ‘ஐ’ படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதால் ‘எனக்குள் ஒருவன்’ படம் ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.