ஒரே வார்த்தையில் சூர்யாவை கண்கலங்க வைத்த விஜய்
![]() |
| ஒரே வார்த்தையில் சூர்யாவை கண்கலங்க வைத்த விஜய் |
அதில் நடிகர் விஜய், தனுஷ், இயக்குனர் முருகதாஸ், விஷ்ணுவரதன் மற்றும் பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். விஜய் பேசும்போது, ‘‘எனக்கு ‘குஷி’க்கு முன் வாழ்வா சாவா என்ற நிலை இருந்தது. இந்தப்படமும் ஓடவில்லை என்றால் என்னாகும் என்ற கேள்வி இருந்தது. அந்த நேரத்தில் ‘குஷி’ என்கிற வெற்றிப்படம் கொடுத்து என்னை தூக்கி விட்டவர் சூர்யா. இப்போது அதற்கு நன்றி சொல்கிறேன்.
‘குஷி’ ரிலீசானவுடன் விக்ரமன் சார் கேட்டார், எப்படி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டீர்கள். இதுல என்ன கதையை இருக்கிறது என்றார். நான் சொன்னேன் சரிதான் ஆனால் எஸ்.ஜே.சூர்யா என்று ஒருத்தர் இருக்கிறார் அவர் கதை சொல்லிக் கேட்க வேண்டும். அப்படி அசத்துவார். நம்மை அப்படியே வசியம் செய்துவிடுவார் என்றேன். இந்த படத்தின் 75 சதவீதம் கதை எனக்கு தெரியும் ‘நண்பன்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது ‘இசை’ படத்தின் கதையை என்னிடம் சொன்னார். நன்றாக இருந்தது. அவர் தனித்தன்மையான டைரக்டர். இசையமைப்பாளராகவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்’’ என்று மனம் திறந்து பேசி நன்றியுடன் பாராட்டினார்.
இதையடுத்து எஸ்.ஜே.சூர்யா பேசியபோது, விஜய் சார் இப்ப எங்கேயோ போய் விட்டார். இன்று ஒரு பிராந்திய மொழியில் 100 கோடி ரூபாய் வசூல் செய்யுமளவுக்கு உயர்ந்த பிறகும் குஷி படத்திற்காக நன்றி கூறியதும் என் கண் கலங்கி விட்டது என்றார். மேலும், ‘இசை’ படத்தில் இசையமைப்பளராக நடிக்க இசைப்பயிற்சி எடுக்க விரும்பினேன். அப்போது ஏ.ஆர். ரகுமான் ‘ஏன் நீங்களே இசையமைக்கக் கூடாது?’ என்று ஊக்கமும் நம்பிக்கையும் கொடுத்தார். நான் இசையமைப்பளராக அவர்தான் காரணம் என்றார்.”
Share This:

