News Ticker

Menu

எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை; நடிகை த்ரிஷா

எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை; நடிகை த்ரிஷா
எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை; நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷாவுக்கும், தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியானது.

மிஸ் சென்னை பட்டம் வென்றதன் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி முன்னணி  நடிகையாக இருப்பவர் நடிகை த்ரிஷா. ‘சாமி’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘கில்லி’, ‘மன்மதன் அம்பு’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள அவர் தற்போது அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார்.

இந்நிலையில், த்ரிஷாவுக்கும் சமீபத்தில் வெளியான ‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத் தலைவன்’ போன்ற படங்களின் தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக ட்விட்டர் தளத்தில் புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியாகின.

த்ரிஷாவிற்கு நிச்சயதார்த்த தகவலால் தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்றும், அப்படி நடக்கும்போது அந்தத் தகவலை நான் தான் முதலில் வெளியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், வருண் மணியன் உடனான திருமணப் பேச்சு குறித்து அவர் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

Share This: