சிம்பொனி இசைக்காக ஜெர்மனி செல்கிறார் ஜி.வி.பிரகாஷ்!
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளதாவது: சர்வதேச சந்தையில் மிக முக்கியமான ஒரு நுகர்பொருளின் விளம்பரத்துக்காக நான் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளேன். உலக அரங்கில் ஜொலிக்கும் சில இசை அமைப்பாளர்களுடன் என்னை ஒப்பிட்டு, எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி.
ஜெர்மனியில் உள்ள ’ஸ்டர்ட்கார்ட்’ என்னும் நகரத்தில் மேற்கொள்ள இருக்கும் இசை பதிவுக்காக நான் விரைவில் அங்கு செல்ல உள்ளேன்.
இசையுலகில் பிரசித்தி பெற்றவர்கள் பலர் ஜெர்மனியில் தோன்றியுள்ளனர். இதில் மிக முதன்மையானவர் எனக் கருதப்படும் கோன்ராத் பௌமனின் இசை காற்றில் மிதக்கும் ஜெர்மனி நாட்டில் என்னுடைய இசையும் கலக்கும் என்பதில் நிச்சயம் நான் பெருமையடைகிறேன் என கூறியுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.
Share This:

