உதயநிதி பிறந்தநாளில் நண்பேன்டா டீசர் வெளியீடு
![]() |
| உதயநிதி பிறந்தநாளில் நண்பேன்டா டீசர் வெளியீடு |
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை வருகிற நவம்பர் 27-ந் தேதி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். அன்றைய தினம் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் என்பதால், அதே தேதியிலேயே படத்தின் டீசரையும் வெளியிடவிருக்கின்றனர்.
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய வெற்றிப்படங்களுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் என்பதால் ‘நண்பேன்டா’ படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. படத்தை டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இப்படத்தை உதயநிதி தனது சொந்த நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்.
Share This:

