News Ticker

Menu

மீண்டும் ஜோடி சேரும் விமல்-அஞ்சலி

மீண்டும் ஜோடி சேரும் விமல்-அஞ்சலி
மீண்டும் ஜோடி சேரும் விமல்-அஞ்சலி
விமலும்-அஞ்சலியும் ‘தூங்கா நகரம்’, ‘கலகலப்பு’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தனர். தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்து ஜோடியாக நடிக்கவிருக்கின்றனர். புதுமுக இயக்குனர் ராஜசேகர் என்பவர் இயக்கும் படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ‘மாப்பிள்ளை சிங்கம்’ என்று பெயரிட்டுள்ளனர். பல்வேறு பிரச்சினைகளால் தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்து வந்த அஞ்சலி, தற்போது சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்தது வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்துக்கு பிறகு விமல் நடிக்கும் ‘மாப்பிள்ளை சிங்கம்’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சூரி காமெடியனாக நடிக்கிறார். இப்படத்தின் போட்டோ ஷுட் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக விமல் தனது கெட்டப்பை மாற்றி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Share This: